எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் STR கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் காரணமாக மஹா திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் மீதம் இருந்த படப்பிடிப்பு தள்ளிப்போனது. 

ஸ்ரீகாந்த், தம்பி ராமய்யா, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். தற்போது இப்படம் குறித்தும் STR உடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் லைவ் நேர்காணலில் பேசியுள்ளார் தயாரிப்பாளர் மதியழகன். மஹா ஷூட்டிங் முன்பு STR அப்படி இப்படி என நிறைய வதந்திகளை கிளப்பினார்களாம். அவருடன் பழகிய பின்பு தான் அவரின் உண்மையான முகம் தெரிந்ததாம். அப்படியே ரஜினி சார் மாதிரி வேகமாக ஸ்டைலாக வந்தவர், என்னை அழைத்து பேசினார். STR தங்கும் கேரவான் கோவாவில் கிடைக்கவில்லை. அதை பொருட்படுத்தாமல் வந்து நடித்து தந்தார். 

எல்லோரும் பயமுறுத்திய நிலையில், என் தோல் மீது கைபோட்டு பேசினார் STR. இந்த லாக்டவுனில் கூட போன் செய்து படத்தின் தற்போதைய நிலை என்ன என்று கேட்டுக்கொண்டார். மஹா படத்தை பொறுத்த வரை, தற்போது ஹன்சிகா மற்றும் பிற நடிகர்கள் நடிக்கும் 7, 8 நாட்கள் கொண்ட ஷூட்டிங் மீதம் உள்ளது. சிம்பு சார் நடிக்கவேண்டிய காட்சிகள் முழுவதும் நிறைவடைந்ததாக கூறினார். 

படத்தின் டீஸரை அடுத்த மாதம் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். நிச்சயம் STR ரசிகர்கள் விரும்பும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜமீல் அதற்கான பணிகளை செய்து வருகிறார். மஹா திரைப்படம் சிறந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்று கூறினார். 

விவேக் இயக்கத்தில் பாக்ஸர் படத்தில் நடிக்கவிருக்கிறார் மதியழகன். அருண்விஜய் மற்றும் ரித்திகா சிங் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இமான் இசையில் இதன் பாடல்கள் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இதைத்தொடர்ந்து மிஷ்கினின் தம்பியான ஆதித்யா இயக்கத்தில் உருவாகவிருக்கும் பிதா படத்திலும் வில்லனாக மதியழகன் நடிக்கிறார். இப்படத்தை மிஷ்கின் மற்றும் ஸ்ரீ கிரீன் சரவணன் இணைந்து தயாரிக்கின்றனர். காணாமல் போன தன் மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாகத் தேடும் ஒரு தந்தையின் வலியைப் பதிவு செய்யும் படமாக இது உருவாகிறது. சில நாட்கள் முன்பு இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.