தமிழ் திரையுலகில் கவனத்தை ஈர்க்கும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் ஒளிப்பதிவாளர் நிக்கெத் பொம்மி ரெட்டி. ஆரம்பத்தில் சில குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நிக்கெத் பொம்மி ரெட்டி தெலுங்கில் “யுத்தம் ஷரணம்” திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரையுலகில் களமிறங்கினார்.

இதனையடுத்து சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த U-Turn திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்த நிக்கெத் பொம்மி ரெட்டி தொடர்ந்து அமேஸானில் வெளியான “புத்தம் புது காலை” ஆந்தாலஜி சீரிஸில் “இளமை இதோ இதோ” எபிசோடுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

குறிப்பாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற “சூரரைப்போற்று” திரைப்படத்திற்கு மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் நிக்கெத் பொம்மி. கடைசியாக தெலுங்கில் நானி மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான “அன்டே சுந்தரனக்கி” திரைப்படத்திற்கும் நிக்கெத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் நிக்கெத் பொம்மி ரெட்டிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல ரேடியோ ஜாக்கியான RJ மெர்ஸி ஜான்-ஐ, நிக்கெத் பொம்மி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு நஸ்ரியா மற்றும் நானி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒளிப்பதிவாளர் நிக்கெத் பொம்மி ரெட்டி-RJ மெர்சி ஜான் இருவருக்கும் கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
 

 

View this post on Instagram

A post shared by Niketh Bommi (@nikethbommi)