தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக படத்திற்கு படம் வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஆர்யா முதல்முறையாக நடித்துள்ள வெப்சீரிஸ் தி வில்லேஜ். த்ரில்லர் வெப்சீரிஸாக தயாராகியிருக்கும் தி வில்லேஜ் வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது.

அடுத்ததாக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிகர் ஆர்யா தற்போது நடித்து வருகிறார். இதனிடையே ஆர்யா நடிப்பில் சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்சன் த்ரில்லர் படமாக தயாராகியிருக்கிறது கேப்டன் திரைப்படம். முன்னதாக ஆர்யா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான டெடி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், கேப்டன் படத்தில் ஆர்யா நடித்துள்ளார்.

ஆர்யாவுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர்  கேப்டன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  யுவா ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்யுள்ள கேப்டன் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள கேப்டன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. பயங்கரமான காட்டிற்குள் அமானுஷ்யமான கொடூர விலங்குகளுக்கு மத்தியில் நடக்கும் கதைக்களமாக உருவாகியிருக்கும் கேப்டன் திரைப்படத்தின் ட்ரைலர் சற்று முன்பு வெளியானது. மிரட்டலான அந்த ட்ரைலர் இதோ…