இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது திரைப்பயணத்தில் 169 திரைப்படமாக அடுத்து நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர், தளபதி விஜயின் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் சார்பில் திரு.கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முன்னதாக முன்னணி கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஜெய்லர் திரைப்டத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. அதேபோல் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தரமணி, ராக்கி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவி ஜெயிலர் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 22) ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பக்கா மாஸ் ஸ்டைலில் இருக்கும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

#Jailer begins his action Today!@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/6eTq1YKPPA

— Sun Pictures (@sunpictures) August 22, 2022