SK 20 ஷூட்டிங் ஸ்பாட்...வைரலாகும் சிவகார்த்திகேயனின் செல்ஃபி !
By Aravind Selvam | Galatta | March 10, 2022 13:27 PM IST
தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக டாக்டர் படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் SK 20 படத்தில் நடிக்கிறார்.இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் bilingual ஆக உருவாகிறது.இந்த படத்தினை தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த Jathi Rathnalu பட இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.
தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் பிப்ரவரி மாதம் தொடங்கியது.சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று முடிந்து இப்போது காரைக்கால்,பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் Maria Ryaboshapka என்ற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இவரது சில ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.தற்போது சிவகார்த்திகேயன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Take Care @Siva_Kartikeyan 💕#Ayalaan #DON pic.twitter.com/uLsUoi6Diy
— 💜 Priya Paiah 💜 (@Its_priyask) March 9, 2022
Our prince @Siva_Kartikeyan anna's Recent 😍💥#PrinceSK #DON #Ayalaan #SK20 pic.twitter.com/YpE4jw5JRs
— PRINCE SIVAKARTHIKEYAN (@SKANI17262002) March 9, 2022