சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிராபிக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ரகு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் ஒரு வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.படம் விரைவில் வெளியாகவுள்ளது எனவே ரசிகர்களுக்கு அடுத்தடுத்து பல அப்டேட்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கடப்படுகிறது.