தமிழ் திரை உலகில் சிறந்த இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அசத்தி வரும் ஜீவி பிரகாஷ் குமார்இசையமைப்பாளராக தனுஷின் மாறன் & வாத்தி, கார்த்தியின் சர்தார், ராகவா லாரன்ஸின் ருத்ரன், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.கடைசியாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடித்த ஜெயம் திரைப்படம் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது. 

முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த இடிமுழக்கம் திரைப்படம் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ரெபெல் படத்தில் தற்போது ஜீவி நடித்து வருகிறார்.இதனிடையே  அடுத்ததாக ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் செல்ஃபி.

இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் உதவி இயக்குனரான இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் செல்ஃபி திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ளனர். DG பிலிம் கம்பனி தயாரிப்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வழங்கும் செல்ஃபி படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்பிரமணியம் சிவா, வித்யா பிரதீப், குணநிதி மற்றும் DG ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் செல்ஃபி படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் செல்ஃபி படத்திலிருந்து ஊர்க்காரன் எனும் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அசத்தலான ஊர்க்காரன் பாடல் இதோ…