இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன்.TR - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிக் கூட்டணியில் 3வது படமாக தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்ட வெந்து தணிந்தது காடு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக ஜெயமோகன் அவர்களின் கதையில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.

வழக்கமான கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடிகர் சிலம்பரசன்.TR தனது முழு அர்ப்பணிப்போடு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு 2வது பாகமும் உண்டு என ட்ரைலர் வெளியான போதே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பின் காரணமாக 2வது பாகம் கட்டாயமாக தயாராகும் என தயாரிப்பாளர் உறுதி அளித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் இடைவேளை காட்சியில் இடம்பெற்றுள்ள அதிரடியான RAP பாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இப்பாடல் அந்த காட்சியை மற்றொரு தளத்திற்கு உயர்த்தியது என்றே சொல்லலாம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நீரஜ் மாதவ் இந்தப் பாடலை எழுதி, பாடியிருந்தார். 

இந்நிலையில் ரசிகர்களின் கவனம் பெற்ற இந்த RAP பாடல் விரைவில் ரிலீசாக உள்ளதாகவும் அதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் ஸ்டூடியோவில் தனிப் பாடலாக அதனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்து நீரஜ் மாதவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Think Music India (@thinkmusicofficial)