இந்திய திரை உலகின் தலைசிறந்த நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள நடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி & சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். GV பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் ட்டன் மயிலடுதுறை படத்தில் தனுஷுடன் இணைந்து ப்ரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, நடிகர் சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று செப்டம்பர் 21ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஹீரோ - வில்லன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் நானே வருவேன் படத்தில் நடிகை இந்துஜா, பிரபு, யோகி பாபு, ஷெல்லி கிஷோர் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எழுத்தாளராக தனுஷ் திரைக்கதை வசனங்களை எழுதியுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய,பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்துள்ளார்.நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 29-ம் தேதி நானே ஒருவன் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் ரீ-ரிக்கார்டிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் ரிலீசுக்கு தயாராகிவிட்டதாகவும் குறிப்பிட்டு யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…
 

Loaded & locked the RR of #NaaneVaruvean 🏹@dhanushkraja @selvaraghavan @theVcreations pic.twitter.com/y9UfKIyGcL

— Raja yuvan (@thisisysr) September 22, 2022