தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் வைபவ் நடிப்பில் கடைசியாக ஹாரர் காமெடி திரைப்படமாக வெளிவந்த திரைப்படம் காட்டேரி. இதனையடுத்து ஃபேண்டசி காமெடி திரைப்படமாக வைபவ் நடித்துள்ள ஆலம்பனா திரைப்படமும் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக வைபவ் நடிப்பில் வெளிவரத் தயாராகியுள்ள திரைப்படம் பபூன். இயக்குனர் அசோக் வீரப்பன் எழுதி இயக்கியுள்ள பபூன் திரைப்படத்தில் வைபவ் உடன் இணைந்து அனகா கதாநாயகியாக நடிக்க, பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூணார் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள பபூன் திரைப்படத்தை தனது ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் சார்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வழங்குகிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில், வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ள பபூன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி பவுன்துரை படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. மேலும் ரிலீஸுக்கு பிறகான பபூன் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் பபூன் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள பபூன் திரைப்படத்தின் ட்ரைலர் இதோ…