தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் சேனல்களில் ஒன்றாகத் திகழும் விஜய் தொலைக்காட்சி கலக்கலான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை வழங்கி தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. மேலும் விஜய் தொலைக்காட்சியின் விஜய் சூப்பர் மற்றும் விஜய் மியூசிக் ஆகிய சேனல்களும் இடைவிடாது அட்டகாசமான திரைப்படங்கள் மற்றும் பாடல்களை ஒளிபரப்பி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியின் புதிய சேனலாக வருகிறது விஜய் டக்கர். முழுக்க முழுக்க பிரத்தியேகமாக இளம் தலைமுறையினரை கவரும் வகையில் “இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்” என்ற வாசகத்தோடு இந்த விஜய் டக்கர் சேனலை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஸ்டார் விஜய் சேனலை போலவே இந்த விஜய் டக்கர் சேனலிலும் கவனத்தை ஈர்க்கும் பல நிகழ்ச்சிகள் உள்ளன.

இந்தக்கால 2K கிட்ஸ்-களின் அட்ராசிட்டியான கல்லூரி கேம்பஸ்ஸை மையப்படுத்திய "காலேஜ் டா" , புதிய பரிமாணத்தில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான "சினிமா காரம் காபி" , அட்டகாசமான கேம் ஷோவாக "ட்ரக் மேல லக்கு" , மேக்கப் மற்றும் ஃபேஷனை மையப்படுத்தி "ஸ்டைலு ஸ்டைலுதான்" ,  பிரபல நட்சத்திரங்களை அவர்களது வீடு, குடும்பம், நண்பர்களோடு சந்திக்கும் "ஸ்டாருடன் ஒரு நாள்" , புதிய டேட்டிங் ஷோவாக வரும் "சம்திங் சம்திங்"

என விஜய் டக்கர் தொலைகாட்சியின் ஆறு அதிரிபுதிரியான நிகழ்ச்சிகளை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து இளைஞர்களை கவரும் புதுப்புது நிகழ்ச்சிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் டக்கர் சேனலையும் அதன் நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்யும் வகையில் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…