தமிழ் திரை உலகின் வெற்றி கூட்டணியான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் - நடிகர் சிலம்பரசன்.TR கூட்டணியின் 3-வது படமாக சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ட்ரைலர் வெளியான சமயத்திலிருந்தே வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு 2ம் பாகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவால் தயாரிப்பாளர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

வெந்து தணிந்தது காடு பார்ட்-2 இன்னும் பிரம்மாண்டமாக PAN INDIA படமாக தயாராகும் எனவும் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தாலும், மல்லிப்பூ பாடல் ரசிகர்களால் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் மல்லிப்பூ பாடலின் இதுவரை வெளிவராத புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை நடன இயக்குனர் பிருந்தா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…
 

#Mallipoo memory🌸 thanks to @menongautham for this song🤗 and the most graceful dancer @SilambarasanTR_ 💕🌟 I saw the response for the song as soon as we completed the song in one shot and I knew you would all love the song ❤️ it’s because of @arrahman sir’s magical music🌟🌟🙏 pic.twitter.com/DziEP1W05r

— Brindha Gopal (@BrindhaGopal1) September 19, 2022