இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் திரைப்பயணத்தில் சாதனை மணி மகுடமாய் அமைந்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஜெயமோகன் அவர்களின் வசனத்தில் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன.

2 பாகங்களைக் கொண்ட பிரம்மாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இதனையடுத்து 2-வது பாகமும் அடுத்த 6-9 மாதங்களுக்குள் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

முன்னணி நட்சத்திரங்களான சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான பூங்குழலி கதாபாத்திரத்தின் அலை கடல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. மனதை மயக்கும் அந்தப் பாடல் இதோ…