ஆகச் சிறந்த இயக்குனராக தொடர்ந்து தரமான திரைப்படங்களை கொடுத்துவரும் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக முதல்முறை நடிகர் சூர்யாவுடன் வாடிவாசல் திரைப்படத்தில் இணைகிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் ஈசிஆர் பகுதியில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்றது.

எனவே விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் தனது விடுதலை திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி தயாராகும் விடுதலை திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். RS இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் விடுதலை திரைப்படத்திற்கு பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பல கட்டங்களாக நடைபெற்று வந்த விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் கொடைக்கானலில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. 

இந்நிலையில் கொடைக்கானலில் நடைபெற்று வந்த விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பை நிறைவு செய்த வெற்றிமாறன் & சூரி உட்பட படக்குழுவினர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

#VetriMaaran's #Viduthalai- Kodaikanal schedule is completed! Intense action scenes choreographed by @PeterHeinOffl@VijaySethuOffl @ilaiyaraaja @elredkumar @Udhaystalin @BhavaniSre @rsinfotainment @GrassRootFilmCo @RedGiantMovies_ @mani_rsinfo @VelrajR @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/OYukpuJ8HF

— Actor Soori (@sooriofficial) September 19, 2022