தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் இந்திய அளவில் சிறந்த நடிகராகவும் விளங்கும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். அந்தவகையில் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியான The Grey Man படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்து தனுஷ் அனைவரையும் கவர்ந்தார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்ன GK படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி முதல் SUN NXT தளத்தில் ஒளிபரப்பாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The mega blockbuster #Thiruchitrambalam streaming worldwide in 4K and Dolby Atmos from 23rd Sept only on Sun NXT! #ThiruchitrambalamOnSunNXT@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @priya_Bshankar #NithyaMenen #RaashiiKhanna pic.twitter.com/wTIq8VOeU9

— Sun Pictures (@sunpictures) September 19, 2022