தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து ஜீவி பிரகாஷ் குமாரின் சர்வம் தாள மயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

முன்னதாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக சிறப்பாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்ற அபர்ணா பாலமுரளி கடைசியாக RJ பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வீட்ல விசேஷம் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அசோக் செல்வன் நடிக்கும் நித்தம் ஒரு வானம் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளி தொடர்ந்து சுந்தரி கார்டன்ஸ் பத்மினி காப்ப உலா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் சுந்தரி கார்டன்ஸ், பத்மினி, காப்ப, உலா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் மலையாளத்தில் இயக்குனர் சுரேஷ் ராமச்சந்திரன் இயக்கத்தில் அபர்ணா பாலமுரளி நடித்துள்ள திரைப்படம் இனி உத்தரம். A&V என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் அபர்ணா பாலமுரளி உடன் இணைந்து கலாபாவன் ஷாஜான், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இனி உத்தரம் படத்திற்கு ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய ஹஷம் அப்துல் வஹப் இசையமைத்துள்ளார் இந்நிலையில் இனி உத்திரம் படத்தின் டீசர் தற்போது வெளியானது. அந்த டீசர் இதோ…