தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் திகழும் நடிகர் விஜய் தேவரகொண்டா, அடுத்ததாக இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2வது படமாக JGM ஜனகணமன எனும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

முன்னதாக சமந்தாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா முதல் முறை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்துள்ள லைகர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. 

குத்து சண்டை வீரராக நடித்துள்ள விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் லைகர் படத்தில் நடித்துள்ளார். 

நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமான லைகர் திரைப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில் தனிஷ்க் பக்ச்சி பாடல்களுக்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்த்துள்ளார். 

லைகர் படத்தை தமிழில் ஆர்.கே.சுரேஷ் அவர்களின் ஸ்டூடியோ 9 புரொடக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் லைகர் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் லைகர் படத்தின் மொத்த ரன் டைம் 2மணி நேரம் 20நிமிடங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

#Liger UA
Runtime 2hr 20mins
August 25th Release In Theatres pic.twitter.com/DflVRELTpk

— Karthik Ravivarma (@Karthikravivarm) August 20, 2022