சிலம்பரசன்TR ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்... பத்து தல பட குழுவின் அதிரடி அறிவிப்பு இதோ!

பத்து தல படத்தின் பெரிய சர்ப்ரைஸ் குறித்த அறிவிப்பு,silambarasan tr gautham karthik in pathu thala next surprise announcement | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - நடிகர் சிலம்பரசன்.TR - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிக் கூட்டணியில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரித்திருந்தார். 

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதையில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வழக்கமான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு புதிய வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. முன்பே படக்குழு அறிவித்தபடி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ள திரைப்படம் பத்து தல. 

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த பத்து தல திரைப்படத்தின் நம்ம சத்தம் பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,வருகிற மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

விரைவில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் வருகிற மார்ச் மூன்றாம் தேதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக பத்து தல படக் குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். இது இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பாக இருக்கலாம் அல்லது அடுத்த பாடலுக்கான அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இது குறித்த அறிவிப்புக்காக மூன்றாம் தேதி வரை காத்திருப்போம். பத்து தல படத்தின் அந்த அறிவிப்பு இதோ…
 

A Huge SURPRISE coming your way from #PathuThala on 03.03.23 🔥
Let the countdown begin 💥#Atman #SilambarasanTR #AGR#PathuThalaFromMarch30

Worldwide #StudioGreen Release💥@StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman pic.twitter.com/isBQs56v5D

— Studio Green (@StudioGreen2) February 28, 2023

காதலருடன் கேரளாவில் பிரபல பிக் பாஸ் நடிகை... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

காதலருடன் கேரளாவில் பிரபல பிக் பாஸ் நடிகை... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!

சினிமா

"70வது பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்... வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!- வைரல் வீடியோ இதோ

சினிமா

"ஃபேமிலி மேன் 2வை தொடர்ந்து மீண்டும் அதிரடி வெப்சீரிஸில் ஆக்ஷனில் இறங்கிய சமந்தாவிற்கு ஷூட்டிங்கில் காயம்!"- விவரம் இதோ