காதலருடன் கேரளாவில் பிரபல பிக் பாஸ் நடிகை... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!

காதலருடன் பிக் பாஸ் ஆயிஷா இருக்கும் புகைப்படங்கள்,biggboss aayesha with his boyfriend in kerala | Galatta

தமிழ்நாட்டின் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு கடைசியாக நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் முறையாக நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே 20 போட்டியாளர்கள் களமிறங்கினர்.

GP முத்து (யூட்யூபர்), அஸீம் (சீரியல் நடிகர்), அசல் கோலார் /வசந்த் (இசைக்கலைஞர் / பாடகர்), ஷிவின் கணேசன் (திருநங்கை - பொது ஜனம்), ராபர்ட் மாஸ்டர் (நடன இயக்குனர்), ஷெரினா (மாடல்), ராம் ராமசாமி (மாடல் / நடிகர்), ஜனனி (இலங்கை - செய்தி வாசிப்பாளர்), ADK-ஆர்யன் தினேஷ் கனகரத்னம் (இலங்கை - இசைக்கலைஞர் / RAP பாடகர்), அமுதாவாணன் (STAND UP காமெடியன் / நடிகர்), VJ மகேஷ்வரி (தொகுப்பாளர் / நடிகை), VJ கதிரவன் (தொகுப்பாளர்), ஆயிஷா (சீரியல் நடிகை), தனலக்ஷ்மி (டிக்டாக்கர் - பொது ஜனம்), ரச்சிதா மகாலக்ஷ்மி (சீரியல் நடிகை), மணிகண்டா ராஜேஷ் (நடிகர் -ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்), சாந்தி அரவிந்த் (நடன இயக்குனர் / நடிகை), விக்ரமன் (அரசியல்வாதி-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளர்) / முன்னாள் அரசியல் தொகுபாளர் -கலாட்டா), குயீன்ஸ் ஸ்டான்லி (வளரும் நடிகை), நிவிஷினி (சிங்கப்பூர் மாடல் - பொது ஜனம்) ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். இவர்கள் தவிர வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல நடிகை மைனா நந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். 

வழக்கம் போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 20 பார்க்க நடைபெற்ற பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் அசீம் டைட்டில் வின்னராக வெற்றி பெற விருதும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் மற்றும் ஷிவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையே பிடித்தனர். குறிப்பாக திருநங்கையாக இறுதிப் போட்டி வரை மிகச் சிறப்பாக விளையாடி பலருக்கு முன் உதாரணமாக திகழ்ந்த ஷிவின் வெற்றி பெறாதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. 20 போட்டியாளர்கள் களமிறங்கிய போதும் யாரும் ரசிகர்களின் கவனத்தை பெற தவறியது இல்லை. அந்த வகையில் சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடினாலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் பிரபல சீரியல் நடிகை ஆயிஷா.

சன் டிவியில் ஒளிபரப்பான மாயா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ஆயிஷா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான சத்யா சீரியலிலும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அதேபோல் பிக் பாஸிலும் நன்றாக விளையாடி 63 வது நாளில் வெளியேறினார். முன்னதாக கடந்த காதலர் தினத்தில் தனது காதலரோடு இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் ஆயிஷா. பிரபலமான புகைப்படக் கலைஞர் ஹரன் ரெட்டியை விரைவில் நடிகை ஆயிஷா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் கேரளாவில் தனது காதலருடன் ஆயிஷா இருக்கும் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Ayshath Zeenath Beevi A P S (@aayesha6_official)

 

View this post on Instagram

A post shared by Ayshath Zeenath Beevi A P S (@aayesha6_official)

ஆஸ்காருக்கு முன் RRR வென்ற சர்வதேச விருது விழாவில் ஜூனியர் NTR கலந்து கொள்ளாதது ஏன்?- சர்ச்சைகளுக்கு விளக்கம் உள்ளே!
சினிமா

ஆஸ்காருக்கு முன் RRR வென்ற சர்வதேச விருது விழாவில் ஜூனியர் NTR கலந்து கொள்ளாதது ஏன்?- சர்ச்சைகளுக்கு விளக்கம் உள்ளே!

மிர்ச்சி சிவாவின் பக்கா என்டர்டெய்னராக வரும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்… அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!
சினிமா

மிர்ச்சி சிவாவின் பக்கா என்டர்டெய்னராக வரும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்… அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட பிளாக்பஸ்டர் வெற்றியின் எதிரொலி... ரசிகர்களை உற்சாகப்படுத்திய செம்ம அறிவிப்பு இதோ!
சினிமா

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட பிளாக்பஸ்டர் வெற்றியின் எதிரொலி... ரசிகர்களை உற்சாகப்படுத்திய செம்ம அறிவிப்பு இதோ!