"70வது பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்... வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!- வைரல் வீடியோ இதோ

முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ரஜினிகாந்தின் பிறந்தநாள் வாழ்த்து,super star rajinikanth birthday wishes to tamilnadu cm mk stalin | Galatta

என்றென்றும் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 70 வயதை தாண்டிய போதும் தனது வேகத்தில் சற்றும் குறைவின்றி ரசிகர்களுக்காக அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்களில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அசத்தலான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. முன்னதாக தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக பிரம்மாண்டமான படைப்புகளை கொடுத்துவரும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதில் முதலாவதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கிரிக்கெட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் மிக முக்கியமான கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதில் இரண்டாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை இயக்க போகும் இயக்குனர் யார்? என ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.சில இளம் இயக்குனர்களின் பெயர்களும் குறிப்பிடப்படும் முக்கிய இயக்குனர்களின் பெயர்களும் பரவலாக பேசப்பட்டு வருவதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இயக்கும் வாய்ப்பை யார் பெறப் போகிறார் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முன்னதாக கோலமாவு கோகிலா டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தில் படையப்பா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன், நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்  தமன்னா ஆகியோருடன் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விரைவில் ஜெயிலர் திரைப்படத்தின் அடுத்த அதிரடியான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது 70வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வணக்கம்… என்னுடைய இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என அவருடைய 70 ஆவது பிறந்த நாளில் நான் மனதார வாழ்த்துகிறேன்! நன்றி..” என தெரிவித்துள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!#Rajinikanth #MKStalin #SuperstarRajinikanth #CMMKSTALIN #HBDMKStalin #Galatta @rajinikanth @arivalayam @DMKITwing pic.twitter.com/1Sp9HImMY4

— Galatta Media (@galattadotcom) February 28, 2023

மிர்ச்சி சிவாவின் பக்கா என்டர்டெய்னராக வரும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்… அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!
சினிமா

மிர்ச்சி சிவாவின் பக்கா என்டர்டெய்னராக வரும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்… அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட பிளாக்பஸ்டர் வெற்றியின் எதிரொலி... ரசிகர்களை உற்சாகப்படுத்திய செம்ம அறிவிப்பு இதோ!
சினிமா

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட பிளாக்பஸ்டர் வெற்றியின் எதிரொலி... ரசிகர்களை உற்சாகப்படுத்திய செம்ம அறிவிப்பு இதோ!

தனுஷின் புதிய வீட்டில் கோலாகலம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

தனுஷின் புதிய வீட்டில் கோலாகலம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!