“பஹீரா திரைப்படம் மன்மதன் படம் போல இருக்கே..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் - முழு வீடியோ இதோ..

பஹீரா விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் - Director Adhik Ravichandran about the Bagheera criticism | Galatta

தமிழ் சினிமாவில் சர்ச்சையுடன் காலடி எடுத்து வைத்த இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் சிலம்பரசனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – முதல் பாகம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இவர் தற்போது விஷால் – எஸ் ஜே சூர்யா வை வைத்து அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கி வருகிறார். படத்தி படப்பிடிப்பு மிக மும்முரமாக நடைபெற்று வரும் இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முன்னதாக உருவாகி வெளியாக தாமதம் ஏற்பட்ட திரைப்படமான ‘பஹீரா' வரும் மார்ச் 3 ம் தேதி வெளியாகவுள்ளது.

சைக்கோ திரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் பஹீரா படத்தின் மிரட்டலான இரண்டாவது டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்திற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வரும் நிலையில் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா மீடியா தமிழில் கலந்து கொண்டு பிரபு தேவா மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

அதில் பஹீரா திரைப்படம் தமிழில் மெகா ஹிட் சைக்கோ திரில்லர் படங்களான சிகப்பு ரோஜாக்கள், மன்மதன், நான் அவன் இல்லை படங்கள் போல் உள்ளது என்ற விமர்சனத்தை எப்படி பார்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்,

“இது விமர்சனம் இல்லை, பொதுவாக ஒரு பிரிவில் பல படங்கள் இருக்கும். ஆனால் இந்த பிரிவில் நீங்கள் சொல்ற படங்களையும் சேர்த்து குறைவான படங்கள் தான் உள்ளது. அதனால் படத்தின் டிரைலர் பார்த்ததும் அவங்களுக்கு அந்த படங்கள் தான் நியாபகம் வரும். தப்பில்லையே அது விமர்சனம் ஆகாது.. அதுபோன்ற படங்களின் பிரிவில் வெளியாகும் இன்னொரு படம் இது. ஒரு 5,10 வருஷத்துல அப்படி ஒரு படம் வெளியாகும் ல அது போல தான் இந்த படமும்.." என்று குறிப்பிட்டார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா வித்தியாசமான பல மிரட்டலான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்திருக்கும் பஹீரா திரைப்படத்தில் அமைரா டஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா செட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர் மற்றும் பிரகதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் செல்வகுமார் SK மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர் மேலும் ரூபன் படத்தொகுப்பு செய்ய கணேசன்.S இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் சிறப்பு காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பஹீரா திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பிரபு தேவா மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த வீடியோ இதோ..

இறுதி கட்ட படப்பிடிப்பில் இந்தியன் 2.. மீண்டும் இணைந்த காஜல் அகர்வால்.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

இறுதி கட்ட படப்பிடிப்பில் இந்தியன் 2.. மீண்டும் இணைந்த காஜல் அகர்வால்.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..

ரெடியா மக்களே.. பிச்சைக்காரன் 2 எப்போது.. அட்டகாசமான அப்டேட்டுடன் வந்த விஜய் ஆண்டனி - வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

ரெடியா மக்களே.. பிச்சைக்காரன் 2 எப்போது.. அட்டகாசமான அப்டேட்டுடன் வந்த விஜய் ஆண்டனி - வைரலாகும் அறிவிப்பு இதோ..

வித்யாசமான கெட்டப்பில் பிரபு தேவா.. பஹீரா திரைப்படத்தின் அட்டகாசமான காட்சி.. – வைரலாகும் Sneak peak இதோ..
சினிமா

வித்யாசமான கெட்டப்பில் பிரபு தேவா.. பஹீரா திரைப்படத்தின் அட்டகாசமான காட்சி.. – வைரலாகும் Sneak peak இதோ..