தனக்கென தனி பாணியில் சிறந்த நடிகையாக படத்திற்கு படம் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தென்னிந்திய திரை உலகின் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டின் துவக்கமே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அசத்தலான துவக்கமாக அமைந்துள்ளது. முன்னதாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படமும், பிரபல மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணா இயக்கத்தில் RJ.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த திரில்லர் திரைப்படமான ரன் பேபி ரன் திரைப்படமும் கடந்த 3ம் தேதி ஒரே நாளில் ரிலீஸாகி மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
தொடரந்து விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள மோகன்தாஸ், ஆக்சன் கிங் அர்ஜுனன் இணைந்து நடித்துள்ள தீயவர் குலைகள் நடுங்க, ஒரு நாள் கூத்து மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில் ஃபர்ஹானா உள்ளிட்ட திரைப்படங்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி இருக்கின்றன. முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து அஜயன்டே ரண்டாம் மோஷனம் படத்தில் நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து, பார்வதி, ஊர்வசி, ரம்யா நம்பீசன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோருடன் இணைந்து HER எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். மேலும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் உடன் இணைந்து புலிமடா எனும் திரைப்படத்திலும் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தி சினிமாவிலும் களமரங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மாணிக் எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்த வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் சொப்பன சுந்தரி.
இயக்குனர் SG.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், சதீஷ், ரெட்டின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மற்றும் ஹூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்திற்கு G.பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் இணைந்து ஒளிப்பதிவு செய்ய K.சரத்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சொப்பன சுந்தரி திரைப்படத்தின் பாடல்களுக்கு அஜ்மல் தஷீன் இசையமைத்துள்ள நிலையில், சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான சீதாராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சொப்பன சுந்தரி திரைப்படத்திற்கு பின்னணி இசை சேர்த்துள்ளார். இந்நிலையில் சொப்பன சுந்தரி திரைப்படத்தின் பணக்காரி பாடல் தற்போது வெளியானது. ரசிகர்கள் கவனம் ஈர்த்த அசத்தலான அந்த பாடல் இதோ…