"ஃபேமிலி மேன் 2வை தொடர்ந்து மீண்டும் அதிரடி வெப்சீரிஸில் ஆக்ஷனில் இறங்கிய சமந்தாவிற்கு ஷூட்டிங்கில் காயம்!"- விவரம் இதோ

அதிரடி வெப்சீரிஸில் ஆக்ஷனில் இறங்கிய சமந்தாவிற்கு ஷூட்டிங்கில் காயம்,samantha got injured in citadel webseries shoot | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து, அதே திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான யே மாயா சேசாவே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. தொடர்ந்து பாணா காத்தாடி & மாஸ்கோவின் காவிரி ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சமந்தா பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலியின் நான் ஈ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களிடையே மிக பிரபலமடைந்தார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து கதாநாயகியாக நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உயர்ந்த சமந்தா தொடர்ந்து தரமான கதை களங்களையும் பல விதமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக, தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படமாக சமந்தா நடிப்பில் PAN INDIA படமாக பல மொழிகளில் வெளிவந்த யசோதா திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னதாக நடிகை சமந்தா நடிப்பில் இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் சகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த வரிசையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து ரொமான்டிக் காமெடி திரைப்படமாக தயாராகி வரும் குஷி திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் சமந்தா ஹாலிவுட்டில் இயக்குனர் ஃபிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் அரேஞ்மெண்ட்ஸ் ஆப் லவ் எனும் ஆங்கில திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனிடையே தற்போது சைட்டாடெல் எனும் சயின்ஸ் பிக்சன் ஆக்ஷன் வெப் சீரிஸில் சமந்தா நடித்து வருகிறார். ஏற்கனவே இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி கே ஆகியோரின் ஃபேமிலி மேன்-2 வெப் சீரிஸில் அதிரடியாக நடித்து மிரட்டிய சமந்தா மீண்டும் இவர்களது கூட்டணியில்  விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவர இருக்கும் சைட்டாடெல் வெப் சீரிஸில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவெஞ்சர்ஸ் எண்டு கேம் & தி க்ரே மேன் ஆகிய திரைப்படங்களின் இயக்குனர்கள் ரூசோ சகோதரர்களின் ஹாலிவுட் வெப் சீரிஸான சைட்டாடெல் வெப் சீரிஸில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த வெப் சீரீஸின் இந்திய வெர்ஷனாக இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கும் சைட்டாடெல் வெப் சீரிஸில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடிகை சமந்தா நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டேட்டஸில் தனது இரண்டு கைகளிலும் காயங்களோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை “Perks of Action” என குறிப்பிட்டு சமந்தா வெளியிட்டுள்ளார். எனவே இந்த காயங்கள் சைட்டாடெல் வெப் சீரிஸின் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்த போது ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் நம்ப தகுந்த இதர தகவல்களும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
hollywood critics association on jr ntr ss rajamouli rrr movie ramcharan

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட பிளாக்பஸ்டர் வெற்றியின் எதிரொலி... ரசிகர்களை உற்சாகப்படுத்திய செம்ம அறிவிப்பு இதோ!
சினிமா

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட பிளாக்பஸ்டர் வெற்றியின் எதிரொலி... ரசிகர்களை உற்சாகப்படுத்திய செம்ம அறிவிப்பு இதோ!

தனுஷின் புதிய வீட்டில் கோலாகலம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

தனுஷின் புதிய வீட்டில் கோலாகலம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

மிர்ச்சி சிவாவின் காமெடி சரவெடியான சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்... கலகலப்பான புது GLIMPSE இதோ!
சினிமா

மிர்ச்சி சிவாவின் காமெடி சரவெடியான சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்... கலகலப்பான புது GLIMPSE இதோ!