பஹீராவாக மிரட்டும் பிரபுதேவா... வேற லெவல் ட்ரெண்டாகும் அட்டகாசமான குச் குச் ஹோத்தா ஹே வீடியோ பாடல் இதோ!

பிரபு தேவாவின் பஹீரா பட குச் குச் ஹோத்தா ஹே வீடியோ பாடல்,Prabhu deva in bagheera movie kuch kuch hota hai video song | Galatta

அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த பிரபுதேவா அவர்கள் நடன கலைஞராக தனது துறை பயணத்தை தொடங்கி நடன இயக்குனராக வளர்ந்து நடிகராக உயர்ந்து பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குனராக முத்திரை பதித்து இந்திய சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக விளங்குகிறார். குறிப்பாக நடிகராக பிரபுதேவாவின் தனித்துவமான நடிப்பிற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் அதிரடி ஆக்சன் படமாக தேள், அட்டகாசமான ஃபேன்டஸி காமெடி படமாக மை டியர் பூதம், மாற்றுத்திறனாளியாக சவாலான வேடத்தில் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் படமாக பொய்க்கால் குதிரை ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து பிரபுதேவா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன.

தொடர்ந்து இந்த 2023ம் ஆண்டும் அடுத்த அதிரடி ஆக்ஷன் படமாக அறிமுக இயக்குனர் சாம் ஜோடிக்ரூஸ் இயக்கத்தில் முஸாஸி படத்தில் நடித்து வரும் பிரபு தேவா, சமீபத்தில் பிக் பாஸ் கவின் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் டாடா திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் அவர்களின் ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் அன்பு எழுதி இயக்கும் உருவாகவும் ரேக்ளா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிக்க, இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் பிளாஷ் பேக் திரைப்படத்திலும் பிரபு தேவா நடித்து வருகிறார். இந்த வரிசையில் வித்தியாசமான பல மிரட்டலான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்துள்ள பிரபு தேவா நடித்துள்ள திரைப்படம் பஹீரா.

தற்போது விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து அமைரா டஸ்டர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா செட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர் மற்றும் பிரகதி உள்ளிட்ட பலர் பஹீரா திரைப்படத்தில் நடித்துள்ளனர். பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பஹீரா திரைப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த பஹீரா திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது.

பிரபுதேவா நடிப்பில் மிரட்டலான சைக்கோ திரில்லர் திரைப்படமாக தயாராகி நீண்ட நாட்களாக ரிலீசாக காத்திருக்கும் பஹீரா திரைப்படம், வருகிற மார்ச் 3ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வகுமார் SK மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள பஹீரா திரைப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய, கணேசன்.S இசையமைத்துள்ளார். இந்நிலையில் பஹீரா திரைப்படத்தின் குச் குச் ஹோத்தா ஹே பாடல் தற்போது வெளியானது. ட்ரெண்டாகும் அந்த பாடல் இதோ…

 

சினிமா

"சொப்பன சுந்தரி ஐஸ்வர்யா ராஜேஷின் பணக்காரி!"- ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான வீடியோ இதோ!

காதலருடன் கேரளாவில் பிரபல பிக் பாஸ் நடிகை... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

காதலருடன் கேரளாவில் பிரபல பிக் பாஸ் நடிகை... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!

சினிமா

"70வது பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்... வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!- வைரல் வீடியோ இதோ