“லேடி கெட்டப் போடனும் னு சொன்னேன்.. அவ்ளோதான்..” – ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த அட்டகாசமான தகவல்கள் - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

பிரபு தேவா லேடி கெட்டப் குறித்து இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ.. Adhik Ravichandran about Prabhu deva lady get up in Bagheera | Galatta

இந்திய திரையுலகின் தன்னிகரற்ற  நடன கலைஞர் என்றால் நினைவிற்கு வருபவர் பிரபு தேவா. திரைத்துறையில் நடன குழுவில் ஒருவராக பணிபுரிந்து பின் படங்களில் பாடல்களுக்கு நடன வடிவமைப்பு செய்தவர் பிரபு தேவா பின் ஒரு சில பாடல்களில் முன்னணி நடன கலைஞராக ஆடியும் கொடுத்துள்ளார். அதன் பின் 1994 ல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலே  ஜனரஞ்சகமான நடிகனான பிரபு தேவா பின் பல முக்கிய திரைப்படங்களில் நடித்து பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட 90 களில் பல பிளாக் பஸ்டர் கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார். அதே நேரத்தில் இந்தியாவின் முக்கிய நடன கலைஞராகவும் வளர்ந்தார் பிரபு தேவா. அதன் பின் தெலுங்கில் ‘நுவோஸ்தானந்தே நேநோடந்தான’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் இதே படத்தை ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் ஜெயம் ரவியை வைத்து மோகன் ராஜா இயக்கியிருப்பார். அதன் பின் தெலுங்கில் சில படங்களை எடுத்தவர் தமிழில் தளபதி விஜயை வைத்து மெஹா ஹிட் ‘போக்கிரி’ திரைப்படத்தை கொடுத்தார். இன்று வரை போக்கிரிக்கு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டு இருக்கிறது. அதன் பின் தொடர்ந்து தமிழ் தெலுங்கில் படங்களை இயக்கி வந்த பிரபு தேவா. அப்படியே பாலிவுட் திரைத்துறைக்கு சென்றார்.

தொடர்ந்து அங்கு படங்களை இயக்கி பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். நீண்ட நாளுக்கு பின் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க வந்தார் பிரபு தேவா. அட்டகாசமாக உருவாகிய ‘தேவி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றியுடன் தொடங்கிய பிரபு தேவா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பிரபு தேவா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் மார்ச்  3 ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பகீரா’ . வித்தியாசமான பல மிரட்டலான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்துள்ள இப்படத்தில் அமைரா டஸ்டர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா செட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர் மற்றும் பிரகதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சைக்கோ திரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா மீடியா பெட்டியில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் பிரபு தேவா கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டனர்.

இதில் பெண் வேடத்தில் பிரபு தேவா நடித்திருப்பது குறித்து, ஆதிக் ரவிச்சந்திரன்

"மாஸ்டர் மொட்டை அடிக்கனும் சொல்லும் போது மேக்கப் னு சொல்லிட்டாரு.. 3 மணி‌ முதல் 4 மணி வரை ஆகும் அந்த மேக்கப் போட, அதுக்கப்புறம் அவரே மொட்டை அடிக்க சொல்லிட்டார்.  தாடியே எடுக்காத மாஸ்டர, தாடி , மீசை லாம் எடுத்து மொட்டை அடிக்க வெச்சோம்.. ஒருநாள் இரவு எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு. சரி சாரிடம் போய் கேட்போம் னு போய் கேட்டேன்.. லேடி கெட்டப் போடனும் னு சொன்னேன்..‌ஒரு மாதிரி முகம் காட்டுனாரு.. அப்பறம் எப்படியோ கேட்டு பண்ண வெச்சோம். " என்றார்.

மேலும் தொடர்ந்து பகீரா திரைப்படத்தில் கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது குறித்து கேட்கையில், "அது கெட்ட வார்த்தை னு இல்ல, அதுவும் ஒரு எமோஷன்ஸ்.‌ சாதாரணமான ஆளுக்கு ஒரு எல்லை இருக்கு. ஆனால் ஒரு சைக்கோ விற்கு அந்த எல்லை இல்லை. அப்போ இதுபோன்ற விஷயங்களுக்கு வரம்பில்லை. ஆனாலும் அது போன்ற வார்த்தைகள் காட்சிகள் தனிக்கை குழுவிற்கு சென்றுதானே வரபோகுது.." என்றார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோவை பார்க்க..

ரெடியா மக்களே.. பிச்சைக்காரன் 2 எப்போது.. அட்டகாசமான அப்டேட்டுடன் வந்த விஜய் ஆண்டனி - வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

ரெடியா மக்களே.. பிச்சைக்காரன் 2 எப்போது.. அட்டகாசமான அப்டேட்டுடன் வந்த விஜய் ஆண்டனி - வைரலாகும் அறிவிப்பு இதோ..

வித்யாசமான கெட்டப்பில் பிரபு தேவா.. பஹீரா திரைப்படத்தின் அட்டகாசமான காட்சி.. – வைரலாகும் Sneak peak இதோ..
சினிமா

வித்யாசமான கெட்டப்பில் பிரபு தேவா.. பஹீரா திரைப்படத்தின் அட்டகாசமான காட்சி.. – வைரலாகும் Sneak peak இதோ..

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள்..  – சாம் சி எஸ் இசையில் அட்டகாசமான பாடல் இதோ..
சினிமா

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – சாம் சி எஸ் இசையில் அட்டகாசமான பாடல் இதோ..