சூர்யா பாடலுக்கு நடனமாடி அசத்தும் ஷிவானி ! வைரல் வீடியோ
By Aravind Selvam | Galatta | September 29, 2020 12:48 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.இந்த தொடரில் தனது நடிப்பால் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.
நடனத்தில் ஆர்வம் கொண்ட ஷிவானி ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.இவரது நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஷிவானி நாராயணன்.
கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொடரின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து இவர் விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் இவர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
சீரியல் நடிகைகளில் தனக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளத்தையே ஷிவானி பெற்றுள்ளார்.சமூகவலைத்தளங்களி
நடனம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட ஷிவானி,தனது நடன மற்றும் ஒர்க்கவுட் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.ஷிவானியின் புகைப்படங்களும்,வீடியோக்களும் ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் தினமும் ஏதேனும் ஒரு புகைப்படத்தையோ,வீடீயோவையோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.
இவரது புகைப்படங்களும் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் மிக பிரபலமான ஒன்றாக இருந்து வந்தன.தினமும் ஏதேனும் ஒரு புகைப்படத்தையோ வீடீயோவையோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.லாக்டவுனில் நடிகைகளை விட மிகப்பிரபலமான ஆளாக மாறிவிட்டார் ஷிவானி.இவரது புகைப்படங்களும்,வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.இவர் குறித்து நமது நெட்டிசன்கள் மீம்களையும் ஷேர் செய்து அசத்தி வருகின்றனர்.பிக்பாஸ் 4-ல் ஷிவானி கலந்துகொள்ள உள்ளார் என்ற செய்திகளும் இணையத்தில் சுற்றி வருகின்றன.
தற்போது தனது புதிய நடன வீடியோ ஒன்றை ஷிவானி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.சூர்யாவின் சூரரை போற்று படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஹிட் பாடலான காட்டு பயலே பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் ஷிவானி.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Akshay Kumar shares new update on his next biggie - good news for fans!
29/09/2020 04:00 PM
Anushka - Madhavan's Nishabdham new romantic video song - watch here
29/09/2020 02:38 PM