அசத்தலான ஸ்டண்ட் காட்சிகளில் தானே நடித்து உலகளவில் அதிகம் ரசிகர்களை பெற்றவர் நடிகர் ஜாக்கி சான். தன்னுடைய ஆக்ஷன் படங்கள் மூலமாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 66 வயதாகும் நிலையில் தொடர்ந்து ஆக்ஷன் மற்றும் காமெடி படங்களில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் அவரே நடித்து ரசிகர்களை ஈர்க்கிறார். 

இந்நிலையில் ஜாக்கி சான் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சில நபர்கள் தன்னுடைய நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னிடம் ஆர்ட்டிஸ்ட் மேனேஜராக பணியாற்றிய ஒரு நபர் தற்போது தன்னிடம் பணியாற்றவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். ஜாக்கி சானின் நிறுவனம் பல இளம் நடிகர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜாக்கி சான் நடிப்பில் கடந்த ஆண்டு தி கிளைம்பர்ஸ் எனும் படம் வெளியானது. இந்த ஆண்டு Vanguard எனும் படத்தில் நடித்துள்ளார். இதன் ட்ரைலர் காட்சிகள் ஜனவரி மாதமே வெளியானது. கொரோனா பாதிப்பு காரணமாக இதன் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து Project X-Traction எனும் படத்தில் நடிக்கவுள்ளார் ஜாக்கி சான். 

இதே போன்ற ஒரு பிரச்சனை சமீபத்தில் தல அஜித்துக்கும் வந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற வாரம் தான் அவர் இது பற்றி தனது வழக்கறிஞர் மூலமாக எச்சரிக்கை விடுத்து லீகல் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டு இருந்தார். தன் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற பிரதிநிதி என்றும் அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அஜித் கூறியிருந்தார். 

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் தல அஜித். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது. இதன் மீதமுள்ள படப்பிடிப்பு துவங்கியது என்று செய்திகள் வெளியாவதை காண முடிகிறது. 

தல அஜித்தின் வலிமை படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்‌ஷனை அள்ளும் என போனி கபூர் யோசனை செய்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின்றன. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.