திருவள்ளூர் அருகே 13 வயது சிறுமியை, 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், சிறுமி 3 மாதம் கர்ப்பம் அடைந்ததால் அதிர்ச்சியடைந்த இருவரின் பெற்றோரும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தான், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கி இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற சிறுவனின் அத்தை வீடானது, ராணிப்பேட்டை மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறது. தற்போது, கொரோனா ஊரடங்கு காலத்தில், அந்த 16 வயது சிறுவன், தனது அத்தை வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்று உள்ளார். 

அப்போது, அந்த வீட்டில் இருந்த அத்தை மகளான 13 வயது சிறுமியிடம் நெருங்கிப் பேசு பழகி வந்துள்ளார். இப்படியாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்துப் பேசிய வந்த நிலையில், காதல் என்ற பெயரில் அந்த சிறுவன் சரவணன், ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி, அந்த 13 வயது சிறுமியின் மனதை மாற்றி உல்லாசம் அனுபவித்து உள்ளார். 

இந்த உல்லாச இன்பம், சரவணனுக்கு பிடித்துப் போக, அடிக்கடி அத்தை வீட்டிற்கு வந்து சிறுமியிடம் ஆசையாகப் பேசி அடிக்கடி உல்லாச இன்பத்தில் இருந்து வந்து உள்ளனர். இப்படியே, அவர்களுக்குள்ளான இந்த உல்லாச வாழ்க்கை 3 மாதமாகத் தொடர்ந்து உள்ளது. இதன் காரணமாக, அந்த 13 வயது சிறுமி மாத கர்ப்பிணியாக மாறினார். 

இதனால், அந்த சிறுமியின் உடலில் சில மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. இதனைக் கவனித்த சிறுமியின் தயார் சிறுமியிடம் விசாரித்து உள்ளார். அப்போது, அத்தை மகன் சரவணன் உடனான உல்லாச இன்பம் குறித்து, அந்த சிறுமி கூறி உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தயார், தன் உறவினரான அந்த சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்து பேசி உள்ளார். 

இதனையடுத்து, இரு வீட்டார் பெற்றோர்களும் பேசிய நிலையில், இரு தரப்பினரும் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படி, 16 வயது சிறுவனுக்கும், 13 வயது சிறுமிக்கும், அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்குப் பிறகு, கர்ப்பிணியாக இருக்கும் அந்த 13 வயது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது பெற்றோர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்க சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிக்கு வெறும் 13 வயது தாக் ஆகிறது என்பதையும், இந்த வயதில் சிறுமி கர்ப்பமானது குறித்தும் தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அந்த சிறுமியிடம் அங்குள்ள பெண் மருத்துவர்கள் என்ன நடந்தது என்று விசாரித்து உள்ளனர். அப்போது, சிறுமி நடந்த விவரங்கள் அனைத்தையும் கூறியுள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அங்குள்ள மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, சமூக நலத்துறை சேவை மைய அலுவலர் பிரியங்கா, அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமி குறித்து புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அனைத்தும் உண்மை என்று தெரிய வந்தது.

இதனையடுத்து, காவல் ஆய்வாளர் கிருஷ்வேணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகவும், சிறுமியைத் திருமணம் செய்த குற்றத்திற்காகவும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.