உத்தரப் பிரதேசத்தில் பரிதாப கணவன் ஒருவர், மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அங்குள்ள ஒரு செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவடத்தைச் சேர்ந்த தேஜ்பால் சிங் என்பவருக்கு, கடந்த பல வருடங்களுக்கு முன்பு அவருக்குத் திருமணம் ஆகி உள்ளது. 

ஆனால், திருமணத்திற்குப் பிறகு அவருக்கும், அவரது மனைவிக்கும் தொடர்ந்து சண்டை வந்து கொண்டே இருந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், இருவரும் முறைப்படி விவகாரத்து பெற்றுப் பிரிந்து சென்றனர்.

அதன் பிறகு, சில காலம் தனியாக வாழ்ந்து வந்த தேஜ்பால் சிங், 2 வதாக, அதே பகுதியில் ஏற்கனவே கணவனை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த பெண்ணை, தேஜ்பால் சிங் 2 வதாக திருமணம் செய்துகொண்டார். இதனால், அந்த பெண்ணுக்கும், தேஜ்பால் சிங் 2 வது கணவர் தான். இருவருக்குமே 

இது 2 வது திருமணம் என்பதால், இருவரும் தங்களது 2 வது வாழ்க்கையைத் தொடக்கத்தில் கொஞ்சம் கவனமுடனே வாழத் தொடங்கினர். ஆனால், அவர்களது வாழ்க்கையில் நாட்கள் செல்ல செல்ல கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது.

இதன் காரணமாக, தனக்கு 2 வது வாழ்க்கையும் இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணிய தேஜ்பால் சிங், மனதிற்குள் ரொம்பவும் நோந்துகொண்டார். ஒரு கட்டத்தில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தற்கொலை செய்துகொள்ளவும் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, கடந்த மே மாதம் தேஜ்பால் சிங், தன் மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு, அந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி உள்ளார். 

இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள், போலீசாருக்கு போன் செய்து, “யாரோ ஒருவர், குடி போதையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக” கூறி உள்ளனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், தேஜ்பால் சிங்கை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், “உயரமாக ஏறினால் நல்ல காற்று வரும் என்பதால், இதன் மீது ஏறினேன்” என்று அவர் விளக்கம் அளித்தார். இதனையடுத்து, ஆத்திரமடைந்த போலீசார், இனி இதன் மீது எல்லாம் ஏறக்கூடாது என்று எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக தேஜ்பால் சிங், வீடு திரும்பினார். ஆனால், வீட்டில் தேஜ்பால் சுங்கிற்கும், அவரது மனைவிக்குமான சண்டை நிற்காமல் தொடர் கதையாகவே மாறிப்போனது. இதனால்,  மனைவியால் தேஜ்பால் சிங் நிம்மதி இழந்து தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாம் தற்கொலை செய்துகொள்ளாமல் என்று எண்ணிய தேஜ்பால் சிங், மீண்டும் அதே செல்போன் டவர் மீது ஏறி உள்ளார். அதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள், அவரை கீழே இறங்கி வரும்படி, அறிவுறுத்தினர். ஆனால், அதற்குப் பதில் அளித்துப் பேசிய அவர், “என் மனைவியால் பெரும் மன உளைச்சலுக்கு நான் ஆளாகி உள்ளேன். என் மனைவி என் மீது பொய்யான வழக்குகளில் சிக்கி வைக்கப் பார்க்கிறார். ஆனால், நான் எவ்வளவோ உண்மைகளைக் கூறியும், போலீசார் என்னை நம்ப மறுக்கிறார்கள் என்றும், என் மனைவிக்கு போலீசார் ஆதரவாக இருப்பதாகவும்” குற்றம் சாட்டினார்.

மேலும், “என் மனைவி உடன் இனி நான் சேர்ந்து வாழ விரும்பவில்லை” என்றும், அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கிறார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து, அங்கு விரைந்து வந்த போலீசார், செல்போன் டவர் மீது ஏறி எப்படியோ, அவர் மனதை மாற்றி கீழே கொண்டு வந்தனர். இதனையடுத்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பரிதாப கணவன் ஒருவர், அங்குள்ள ஒரு செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.