இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக ஜொலிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் உலகளவில் பல கோடி பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக வலம் வருகிறார். கடைசியாக ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த ஜீரோ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு ரிலீஸானது. 

தொடர்ந்து பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் தற்போது நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. முன்னதாக மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி துரை படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார் ஷாருக் கான்.

மேலும் ஆமிர் கானின் லால் சிங் சத்தா, சல்மான்கானின் டைகர் 3 ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்த்ரா உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஷாரூக்கான் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த வரிசையில் ஷாருக்கான் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது.  

முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK, சஞ்சு ஆகிய படங்களின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகும் டன்கி எனும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரிக்கும் டன்கி படத்தில் டாப்சி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் டன்கி திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் புதிய ப்ரோமோ வீடியோவும் வெளியானது. வைரலாகும் ஷாருக்கானின் டன்கி பட அறிவிப்பு வீடியோ இதோ…