தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  அடுத்தடுத்து வரிசையாக ஹிட் படங்களை கொடுக்க தயாராகி வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வருகிற மே 13-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் #SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே முதல்முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் #SK20 திரைப்படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் உருவாகும் #SK20 திரைப்படத்தில் மரியா ரியாபோஸ்கா எனும் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடிகை கதாநாயகியாக நடிக்கிறார்.

முழுவீச்சில் நடைபெற்று வரும் #SK20 திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பாளர் நாராயன் தாஸ் நரங் தற்போது காலமானார். தயாரிப்பாளர் நாராயன் தாஸ் நரங் மறைவுக்கு சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் அந்த பதிவு இதோ…