தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ள இயக்குனர் நெல்சன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த டாக்டர் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவான பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்த பீஸ்ட் திரைப்படத்தை குழந்தைகளும் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் விமர்சன ரீதியில் பல கலவையான விமர்சனங்களையே பீஸ்ட் சந்தித்து வருகிறது. எனவே நெல்சன் அடுத்து இயக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர்169 திரைப்படம் கைவிடப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெல்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பில் #கோலமாவு கோகிலா #டாக்டர் #பீஸ்ட் ஆகிய படங்களின் வரிசையில் #தலைவர்169 என பதிவிட்டு சோசியல் மீடியாவில் பரவிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இயக்குனர் நெல்சனின் ட்விட்டர் பக்கம் இதோ…
nelson indirectly answers about the rumours on thalaivar169 movie rajinikanth