தமிழ் திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் முன்னணி நட்சத்திர நடிகராகவும் திகழும் நடிகர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்து வந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முற்றிலும் நிறைவடைந்தது. 3-வது முறையாக இணைந்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரஹ்மான்-சிலம்பரசன் TR வெற்றி கூட்டணியின் வெந்து தணிந்தது காடு பெரும எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் சிலம்பரசன்.TR நடித்து வருகிறார். நடிகர் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பத்து தல படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் திரைப்படத்தில் சிலம்பரசன்.TR நடிக்கவுள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் சிலம்பரசன்.TR பாடிய பாடல்களை ரசிகர்கள் கொண்டாடுவதுண்டு. அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்திருக்கும் தி வாரியர் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்.T.R ஒரு பாடல் பாடியுள்ளார். 

நடிகர் ஆதி மிரட்டலான வில்லனாக நடிக்க, கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள தி வாரியர் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் லிங்குசாமியின் தி வாரியர் படத்திற்காக நடிகர் சிலம்பரசன்.T.R பாடியுள்ள புல்லட் பாடல் வருகிற ஏப்ரல் 25-ம் தேதி மாலை 5:45 மணிக்கு ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.