விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கி பெரிய வரவேற்பை பெற்று வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.விகடன் டெலிவிஸ்டாஸ் விஜய் தொலைக்காட்சியுடன் முதல் முறையாக இந்த தொடருக்காக இணைந்துள்ளனர்.விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்து வரும் இந்த தொடரை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார்.

இந்த தொடரில் பிரபல நடிகரும் தொகுப்பாளருமான தீபக் ஹீரோவாக நடித்துள்ளார்,ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்துள்ளார்.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் தெய்வமகள் தொடரில் அண்ணியாக நடித்து புகழ் பெற்ற ரேகா,மீரா கிருஷ்ணன்,நவீன் வெற்றி,தர்ஷனா,யோகி என பல நட்சத்திரங்கள் நடித்து அசத்தி வருகின்றனர்.

எதார்த்தனமான வித்தியாசமான கதைக்களத்துடன் நகர்ந்து வரும் இந்த தொடர் ரசிகர்களின் ஆதரவை ஒளிபரப்பை தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே பெற்று விட்டது.கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

இந்த தொடரின் நாயகன் தீபக் தனது வீட்டின் முன் ஏற்பட்டுள்ள பாதிப்பை எடுத்துக்காட்டி அதிலும் தற்போது டப்பிங் செய்ய செல்வதாகவும் மற்றவர்கள் வீட்டில் பத்திரமாக இருக்கும்படியும் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.