தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உயர்ந்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.அதிக ரசிகர்களை கொண்டுள்ள சில தமிழ் நடிகர்களில் ஒருவராக தளபதி விஜய் இருக்கிறார்.இவரது படங்கள் ரிலீஸ் ஆனாலே திரையரங்குகள் திருவிழா கோலம் கொண்டு இருக்கும்.இவரது மாஸ்டர் படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது 

அடுத்ததாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.திரைப்படங்களை தாண்டி பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை தளபதி விஜய் அவ்வப்போது செய்து வருவார்.அவரைப்போலவே இவரது ரசிகர்களும் தங்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர்.

கொரோனா நிவாரணம்,வெள்ள நிவாரணம் என அனைத்திலும் தங்கள் பங்கினை ஆற்ற விஜய் மக்கள் இயக்கம் தவறியதில்லை.சமீபத்தில் முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஜெய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்துவந்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.அதனை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,என்றாலும் பலரும் உணவு,அத்தியாவசிய பொருட்கள் இன்றி சிரமப்படுகின்றனர்.அவர்களுக்கு உதவும் படி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னையில் நடமாடும் விலையில்லா உணவகம் மூலம் உணவு வழங்கி உதவி செய்து வருகின்றனர்.விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.