சின்னத்திரையில் பல முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் மெகா தொடர்களிலும் நடித்த ரியோ ராஜ், விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

வெள்ளித்திரையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் ரியோ கதாநாயகனாக களமிறங்கினார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும். பாசிட்டிவ் பிரண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பத்ரி வெங்கடேஷ் இயக்கிய பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ரோபோ ஷங்கர்,சந்தானபாரதி, பாலசரவணன், முனிஸ்காந்த், டைகர் தங்கதுரை ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ப்ளான் பண்ணி பண்ணனும் படத்திலிருந்து அல்லோல கல்லோலம் பாடல் வீடியோ வெளியானது. இந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.