தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாக சமீபத்தில் வெளியானது உடன்பிறப்பே. நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான உடன்பிறப்பே திரைப்படம் கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசானது.

இயக்குனர் இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ள உடன்பிறப்பே திரைப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து இயக்குனர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் சமுத்திரக்கனி, சூரி, வேல ராமமூர்த்தி, கலையரசன், ஷிஜா ரோஸ், குக் வித் கோமாளி தீபா, நிவேதிதா சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

உடன்பிறப்பே திரைப்படத்தை  R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான அழகான குடும்ப திரைப்படமாக வெளிவந்த உடன்பிறப்பே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் நடிகை ஜோதிகாவின் உடன்பிறப்பே திரைப்படத்தில் இடம் பெறாத படத்தின் DELETED SCENE  தற்போது வெளியானது. எமோஷ்னலான இந்த DELETED காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடன்பிறப்பே படத்தின் DELETED SCENE வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.