இந்திய  சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்புக்குப் பின் அடுத்த பிரம்மாண்டமாக வெளிவருகிறது RRR திரைப்படம். DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

RRR படத்தில் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து மொழிகளில், அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 7 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் RRR திரைப்படம் ரிலீசாகவுள்ளது. KK.செந்தில்குமார் ஒளிப்பதிவில் தயாராகும் RRR படத்திற்கு இசை அமைப்பாளர் M.M.கீரவாணி இசை அமைத்துள்ளார்.. 

சமீபத்தில் வெளியான RRR திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அனைத்து மொழிகளிலும் சேர்த்து இந்திய அளவில் RRR படத்தின் ட்ரைலர் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.