தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் சமுத்திரக்கனி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வினோதய சித்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தெலுங்கில்,RRR, சர்க்காரு வாரி பாட்டா, பீம்லா நாயக் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதனையடுத்து இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட யாவரும் வல்லவரே திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இப்படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி நேரடியாக ஜீ5 OTT தளத்தில் ரிலீசாகிறது சமுத்திரகனியின் சித்திரை செவ்வானம்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனரான சில்வா முதல்முறை இயக்குனராக அறிமுகமாகும் சித்திரை செவ்வானம் திரைப்படத்தை இயக்குனர் விஜய் தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி உடன் இணைந்து ரீமா கல்லிங்கல் மற்றும் நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தந்தை - மகள் பாசத்தை பேசும் அழகான திரைப்படமான சித்திரை செவ்வானம் திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். சித்திரை செவ்வானம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று நடிகர் தனுஷ் வெளியிட்ட இந்நிலையில் இன்று மோஷன் போஸ்டர் வெளியானது . அந்த மோஷன் போஸ்டர் இதோ…