வங்காளதேச அணி பேட்ஸ்மேனின் காலில் வேண்டும் என்றே பந்தை எறிந்து பாகிஸ்தான் வீரர் ஷகீன் ஷா அப்ரிடி காயப்படுத்தி சம்பவம், கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஆண்டு துபாயில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில், முதன் முறையாக இந்திய அணியை வென்று பாகிஸ்தான் அணி, சரித்த சாதனை படைத்தது.

அத்துடன், நடப்பு  டி20  உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மிகச் சிறப்பாகவே விளையாடி வந்தது. இதில், தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த பாகிஸ்தான், அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது பாகிஸ்தான்.

அதே நேரத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 20 ஓவர் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை கடந்த வாரம் வெளியிட்ட நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாபர் ஆசம் நம்பர் 1 இடத்தை பிடித்து இருந்தார்.

அத்துடன், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஒரு இடம் உயர்ந்து 5 வது இடத்தை பிடித்திருந்தார்.

இந்த நிலையில் தான், வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது மூன்று டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

அதன் படி, இந்த இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. 

அதனைத் தொடர்ந்து, டாக்காவில் நேற்று முன் தினம் நடந்த 2 வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றது.

ஆனால், இந்த போட்டியின் போது, வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன் அபிப் ஹூசைன் மீது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான  ஷகீன் ஷா அப்ரிடி, வேண்டுமென்றே பந்தை வீசி அவரது காலில் காயத்தை ஏற்படுத்தினார்.

அவர் பந்தை வீசி எரிவதற்கு முன்பான முந்தைய பந்தில் அபிப் சிக்சர் அடித்திருந்தார். அந்த கோபத்தை அப்ரிடி இந்த வகையில் வெளிப்படுத்தியிருந்தார்.

அதாவது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகீன் ஷா அப்ரிடி, வேண்டும் என்றே அபிப் ஹூசைன் மீது பந்தை வீசியதும், அவர் அப்படியே அந்த மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரது காலில் கடுமையான காயம் ஏற்பட்டது.

இந்த போட்டியை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்திருந்த இரு நாட்டு ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த போட்டிக்கு பிறகு, இது தொடர்பாக விசாரணை நடத்திய கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு, போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதித்து உத்தரவிட்டு உள்ளது.

என்றாலும், வங்காளதேச அணி வீரர் மீது பாகிஸ்தான் வீரர் ஷகீன் ஷா அப்ரிடி, வேண்டும் என்றே பந்தை எறிந்து காயப்படுத்திய நிகழ்வு, கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.