தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் எம்ஜிஆர் மகன்.வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் சத்யராஜ் மற்றும் சமுத்திரக்கனி இணைந்து நடித்த எம்ஜிஆர் மகன் திரைப்படம் கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து சுந்தரபாண்டியன் பட இயக்குனர் S.R.பிரபாகரன் இயக்கத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் இயக்குனர் K.V.கதிர்வேலு இயக்கத்தில் ராஜவம்சம் என சசிகுமார் நடித்த இரண்டு திரைப்படங்களும் வருகிற நவம்பர் 26ஆம் தேதி ரிலீசாகிறது. தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய் மற்றும் நா நா ஆகிய படங்களும் சசிகுமார் நடிப்பில் தயாராகி வருகின்றன.

அந்தவகையில் அடுத்ததாக சசிகுமாரின் நடிப்பில் தயாராகிறது அயோத்தி. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிக்கும் அயோத்தி படத்தை இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்குகிறார்.மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் N.R.ரகுநந்தன் இசையமைக்கும் அயோத்தி படத்திற்கு சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஷெரீஃப் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

இந்நிலையில் அயோத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. அயோத்தி திரைப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி திரைப்படத்தின் பட பூஜை புகைப்படங்கள் இதோ…