தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் VJS46 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி மற்றும் இசக்கி துரை இயக்கத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

முன்னதாக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் முக்கிய மொழிகளில் தயாராகும் மைக்கேல் திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் உடன் இணைந்து முக்கியமான கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இந்நிலையில் மைக்கேல் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தில் நடித்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து மைக்கேல் திரைப்படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.