இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராகவும் சிறந்த நடிகையாகவும் தொடர்ந்து படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை சமந்தா, கடைசியாக தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி & நயன்தாராவுடன் இணைந்து நடித்து வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து சமந்தா நடிக்கும் அடுத்தடுத்து திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் முன்னதாக இயக்குனர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் திரில்லர் படமாக தயாராகியுள்ள யசோதா திரைப்படம் PAN INDIAN திரைப்படமாக விரைவில் வெளிவர உள்ளது. 

அடுத்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக குஷி திரைப்படத்தில் தற்போது சமந்தா நடித்து வருகிறார்.இதனிடையே இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையப்படுத்தி இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் தெலுங்கில் தயாராகி இருக்கும் சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி ஆகியோர் சாகுந்தலம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குணா டீம் ஒர்க்ஸ் சார்பில், PAN INDIAN திரைப்படமாக தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்திற்கு சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசையமைத்துள்ளார். 

சாகுந்தலம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாகுந்தலம் திரைப்படத்தில் தேவ் மோகன் நடித்துள்ள துஷ்யந்தா கதாபாத்திரத்தின் கேரக்டர் போஸ்டரை தேவ் மோகனின் பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 18) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…
 

Wishing our ever-charming, valiant and handsome King #Dushyant, @ActorDevMohan a very Happy Birthday! ⚔️🤍#Shaakuntalam @Gunasekhar1 @Samanthaprabhu2 #ManiSharma @neelima_guna @GunaaTeamworks @DilRajuProdctns @SVC_official @tipsofficial #MythologyforMilennials #EpicLoveStory pic.twitter.com/pfAvfLUWnq

— Gunaa Teamworks (@GunaaTeamworks) September 18, 2022