இந்திய திரையுலகில் முக்கிய நடிகராக எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் மிக சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகர் பிரகாஷ் ராஜ் , இந்த ஆண்டில் மட்டும் தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கிளாப், பட, கே ஜி எப் 2, மேஜர், சீதா ராமம், விருமன் ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 

கடைசியாக தனுஷுடன் இணைந்து பிரகாஷ் ராஜ் நடித்து வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இதனையடுத்து இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பிரகாஷ் ராஜ், சுந்தர சோழர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக வெளிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீசாகிறது. 

தொடர்ந்து வரிசையாக சமந்தாவின் ஷாகுந்தலம், கன்னட நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடித்துள்ள கப்சா ஆகிய திரைப்படங்களிலும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.ரசிகர்களை “ஹாய் செல்லம்” என அழைக்கும் பிரகாஷ் ராஜ் அவர்கள் ரசிகர்களுக்கும் செல்லம் தான். அந்த வகையில் ரசிகர்கள் பிரகாஷ்ராஜுக்காக செய்த மீம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜின் காட்சியையும் அத்திரைப்படத்தில் இடம் பெற்ற தேன்மொழி பாடலையும் சேர்த்து அதனுடன் கில்லி படத்தில் வரும் முத்துப்பாண்டி கதாபாத்திரத்தை கலந்து ரசிகர்கள் செய்த இந்த கலக்கலான மீம் வீடியோவை கண்டு மகிழ்ச்சி அடைந்த பிரகாஷ்ராஜ், “இதை யார் செய்தார்கள்… எனது இந்த நாளை மகிழ்ச்சியாக்கியது… உங்கள் அன்புக்கு நன்றி… செல்லம்ஸ் ஐ லவ் யூ" என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இதோ…
 

Who ever did this .. made my day ❤️❤️ thank you for the love … CHELLAM s I love uuuuu #muthupandi #gilli@trishtrasherspic.twitter.com/K5F74stwfa

— Prakash Raj (@prakashraaj) September 18, 2022