தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த சினம் திரைப்படம் நேற்று செப்டம்பர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் அக்னி சிறகுகள் மற்றும் பார்டர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கின்றன.

இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு பிரத்தியேக பேட்டியளித்த நடிகர் அருண் விஜய் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்தவகையில் தளபதி விஜய் குறித்து பேசிய அருண் விஜய், விஜய் அளித்த ஊக்கத்தால் தான் மீண்டும் தனக்கான பாதையில் சரியாக பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அருண் விஜய், "அவர் வீட்டில பேசும்போது சார் நிறைய கேப் வந்துட்டுருக்கு… வீட்டில, வெளியில எல்லாரும் நீங்க வேற ஏதாவது செய்யலாம், படங்களை தயாரிக்கலாம்னுலாம் சொல்றாங்க… உங்க டேட்ஸ் இருந்தா சொல்லுங்க… நான் ஒரு படம் பண்ணுறேன்னு கேட்டேன். அவர் உடனே ஷாக்காகிட்டார். "என்ன அருண் யார் என்ன சொன்னா என்ன… நீங்க என்ன விட பெட்டரா ஃபைட் பண்றீங்க, எல்லாமே பண்றீங்க சஞ்சீவ்கிட்ட கூட அடிக்கடி சொல்லுவேன் இதுக்கெல்லாம் டைம் எடுக்கும் அதுக்காக மனச தளர விடாதிங்க… அவங்க சொன்னாங்க இவங்க சொல்றாங்கன்னு நீங்க விட்ராதீங்க"-னு சொன்னாரு... நான் அப்பவே கண்கலங்கிட்டேன். 
என்ன விட பெட்டரா ஃபைட் பண்ணுவீங்க.. என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் பேசிட்டுருக்கேன் அப்படின்னு எல்லாம் சொல்லும்போது எமோஷனல் ஆயிட்டேன். அப்புறம் சாப்பிட சொன்னாரு இல்ல சாப்பிடலனு சொன்னேன். அப்புறம் ஒரு காஃபி சாப்பிட்டோம். அப்புறம் என்ன மாடிக்கு கூட்டிட்டு போனாரு, அப்பதான் வீடு கட்டிருந்தாரு அவருடைய ஜிம் எல்லாம் காட்டினார்… ஃபண்ணா பேசிட்டு இருந்தாரு… அப்புறம் அங்கிருந்து வெளியில் வந்து என் காருல உட்கார்ந்ததும் முடிவு பண்ணேன்… இல்ல நான் இந்த ட்ராக்குல தான் போகப் போறேன்… இது யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல… அப்படின்னு அன்னைக்கு முடிவு பண்ணேன்… அப்புறம் வீட்டுக்கு வந்து வீட்ல இருக்கவங்ககிட்ட சொன்னேன்… அப்போ இருந்து விஜய் சார் சொன்னது அடிக்கடி நினைப்பேன்… ஒரு கோ-ஸ்டார் அவர் அப்படி சொல்லும் போது அது ஒரு பெரிய என்கரேஜ்மெண்ட் கொடுத்தது. அந்த ஒரு லோ பிரியட்ல அவருடைய எங்கரேஜ்மெண்ட் தான் என்ன தள்ளுச்சு" என அருண் விஜய் தெரிவித்துள்ளார். அருண் விஜயின் அந்த பிரத்தியேக பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.