ஆகச் சிறந்த நடிகராக படத்துக்குப்படம் தன்னைத் தானே செதுக்கி தற்போது உலக அளவில் பிரபல நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் முன்னதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்துள்ள நிலையில், இந்த செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி (SIR) படமும் விரைவில் வெளிவர உள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
 
1930-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதை களத்தை மையமாகக் கொண்ட அதிரடியான திரைப்படமாக தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் மாநகரம் & மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் சந்தீப் கிஷன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

We are very elated to welcome The Highly talented & Happening Star , @sundeepkishan on board for #CaptainMiller 🎉💥 #SundeepKishanInCaptainMiller @dhanushkraja @ArunMatheswaran @gvprakash @CaptainMilIer pic.twitter.com/1NbjSrzZYi

— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 17, 2022