கே.ஜி.எஃப் பாணியில் ஆக்ஷன் படத்தில் நடிப்பது குறித்து பேசிய RJ பாலாஜி !
By Sakthi Priyan | Galatta | November 09, 2020 18:43 PM IST

LKG படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். RJ பாலாஜியுடன் இணைந்து NJ சரவணனும் இந்த படத்தை இயக்கியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முற்றிலுமாக முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகிவந்த நிலையில், வரும் தீபாவளி அன்று இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. கொரோனா காரணமாக, இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி தளத்தில் படத்தை காண ஆவலாக உள்ளனர் திரை ரசிகர்கள்.
படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பியது. நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் RJ பாலாஜி, மூக்குத்தி அம்மனை சந்தித்தவுடன் அவர் வாழ்வில் நடக்கும் மாற்றங்களே படத்தின் கதைக்கருவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி படமாக இருந்தாலும், நிகழ்கால சமூக பிரச்சனைகளை பேசும் படமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். மதத்தை வைத்து நடக்கும் வியாபார விஷயங்கள் குறித்தும் இந்த படம் பேசியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உருவான விதம் பற்றி கடந்த வாரம் தெரியவந்தது. கிளைமாக்ஸ் காட்சி 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. யாருமே எதிர்பாராவகையில் பெரும் ஜனத்திரள் கொண்ட இக்காட்சியை படக்குழு ஒரே நாளில் படமாக்கியுள்ளது. படத்தின் பாடல்களான ஆடி குத்து மற்றும் பகவதி பாபா பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி அட்டகாசமான வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் ஆடியோ ஜுக் பாக்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ட்விட்டர் லைவ்வில் தோன்றிய RJ பாலாஜி, மூக்குத்தி அம்மன் திரைப்படம் பற்றியும், தனது திரைப்பயணம் பற்றியும் பேசினார். ரசிகர்கள் எழுப்பிய பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர்...கே.ஜி.எஃப் மாதிரி ஆக்ஷன் படங்கள் எதிர்பார்க்கலாமா என்ற கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த பாலாஜி, இயக்கினால் அது போன்ற படம் செய்வேன். நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதுபோன்ற படங்களை சிறப்பாக செய்வதற்கு பல பேர் இருக்கும்போது நான் அதை செய்யவில்லை. சாதாரண மானுடன் ரோலில் நடிக்க அதிக கதைகள் உள்ளது. 2057-ம் ஆண்டில் ஆக்ஷன் படங்கள் எதிர்பார்க்கலாம், அதற்குள் ஜிம் சென்று உடலை ஏற்றிவிடுவேன் என்று பதிலளித்துள்ளார்.
Q: Q: Hi balaji anna i am great fan of you future unga kitta eruthu action films like KGF ethir pakalama😛😅 #MookuthiAmmanWithRJB
— RJ Balaji (@RJ_Balaji) November 9, 2020
- @Royal58724067
A: pic.twitter.com/RRY56C7LFb
Balaji-Sanam's adjustment controversy conversation unseen video goes viral!
09/11/2020 05:10 PM
Atlee's super sweet romantic statement | Priya Atlee | Wedding Anniversary
09/11/2020 04:08 PM
Allu Arjun's Pushpa to commence from November 10 | Rashmika Mandanna | Sukumar
09/11/2020 03:32 PM
Maanaadu third schedule resumes in Pondicherry, Simbu's new image goes viral
09/11/2020 02:04 PM