அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்று உள்ள டிரம்பை அவர் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக முன்னாள் உதவியாளர்கள் கூறி உள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“உலகிலேயே மிகவும் அதிகாரம் மிக்க தலைவர் யார்?” என்ற அதிகார போட்டியில், உலகையே திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல்.

அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தேர்கல் களம் வழக்கத்தை விட சூடு பிடித்து வெடித்துக் கிளம்பிய நிலையில், அதில் வெற்றி - தோல்வியும் முடிவாகி இருக்கிறது.

ஆம், அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாளாக தொடர்ந்து நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. அதில், 284 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் வெற்றிக்குத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “யாரையும் கை விடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம்” என்று, ஜோ பைடன் வெற்றி உரை நிகழ்த்தினார்.

மேலும், “கருப்பின பெண் முதல் முறையாக அமெரிக்காவில் உயர் பதவிக்கு வந்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாக அந்நாட்டில் பார்க்கப்பட்டு வருகிறது. 

அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுப் போன டிரம்பை, அவர் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டதாக முன்னாள் உதவியாளர்கள் தற்போது கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். 

அதாவது, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் 3 வது மனைவி தான் இந்த மெலானியா. டிரம்புக்கும் மெலானியாவுக்கும் சுமார் 25 வயது வித்தியாசம் உள்ளது என்று கூறப்படுகிறது. அத்துடன், டிரம்புக்கும் - அவர் மனைவி மெலனியாவுக்கும் திருமணம் நடைபெற்று வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே ஆவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை அவருடைய மனைவி மெலனியா டிரம்ப், விவகாரத்து செய்து விடுவார் என்று வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் ஒருவர் தற்போது கூறியிருக்கிறார். 

இது குறித்து முன்னாள் உதவியாளர் ஸ்டீபனி வோல்கோஃப் கூறுகையில், “டிரம்ப் - மெலானியாவின் மகன் போரனுக்கு சொத்தில் சமமான பங்கை வழங்க மெலனியா திருமணத்திற்கு பிந்தைய ஒப்பந்தத்தில் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்” என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். 

ஆனால், இது குறித்து பேசிய மற்றொரு உதவியாளர் ஒமரோசா மனிகவுல்ட் நியூமன் கூறுகையில், “தம்பதியின் 15 ஆண்டுகால திருமணப் பந்தம் முடிந்து விட்டது என்றும், அவர் பதவியில் இருந்து வெளியேறினால் மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார் என்றும், இதற்காகவே மெலனியா காத்திருக்கிறார்” என்றும், கூறியுள்ளார்.  

“டிரம்ப் பதவியில் இருக்கும் போது மெலானியா விவகாரத்து செய்ய முயற்சித்தால், டிரம்ப்புக்கு பெரும் அவமானமாக அமையும் என்பதோடு, மெலனியாவை  தண்டிக்க டிரம்ப் அடுத்தடுத்து புதிய புதிய வழியைத் தேடி கண்டு பிடிப்பார் என்பதால், இத்தனை ஆண்டு காலம் மெலானியா காத்திருந்தார்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, டிரம்ப் - மெலனியா இடையே இதற்கு முன்பு மனக்கசப்பு இருந்ததாக சில முறைகள் தகவல்கள் வந்தன. ஆனால், இதற்கு அவர்கள் இந்த தகவலை மறுத்தே வந்தனர். ஆனால், தற்போது, வெளியாகி உள்ள இந்த தகவல் பற்றி, டிரம்ப் - மெலனியா தரப்பில் இருந்து இன்னும் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.