நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சுல்தான், இதனை அடுத்து தெலுங்கில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கும் புஷ்பா படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகி அந்தஸ்தை பிடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் திரையுலகிலும் நுழைந்துள்ளார். 

அந்த வகையில் தற்போது இயக்குனர் விகாஷ் பஹி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கும் GOOD BYE திரைப்படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. முன்னதாக ராஷ்மிகா நடிப்பில் உருவான மிஷன் மஞ்சு பாலிவுட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

RSVP மூவிஸ் & GUILTY BY ASSOCIATION MEDIA இணைந்து தயாரிக்க, சாந்தனு பக்சி இயக்கத்தில் உருவாகும் மிஷின் மஞ்சு திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, பர்மிட் சேதி, ஷாரிப் ஹாஸ்மி, அர்ஜன் பஜ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் மிஷன் மஞ்சு திரைப்படம் அடுத்த ஆண்டு (2022), மே மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மிஷன் மஞ்சு படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.