தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஓ மணப்பெண்ணே. நடிகை பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியானது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனாக விஜய் தேவர் கொண்டா மற்றும் நடிகை ரிது வர்மா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இயக்குனர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பெல்லி சூப்புளு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில் கிரிபாகரன் படத்தொகுப்பு செய்துள்ளார் இத்திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ரிலீசான நாள் முதல் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஓ மணப்பெண்ணே படத்தின் பாடல்களும் ரசிக்கும்படியாக அமைந்தன. குறிப்பாக போதை கணமே பாடல் பலரும் முணுமுணுக்கும் பாடலாக ஹிட் அடித்துள்ளது.

அந்த வகையில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையில் ஓ மணப்பெண்ணே படத்திலிருந்து தற்போது சகியே பாடல் வீடியோ வெளியானது. ரம்மியமான இந்த சகியே வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.